சிறந்த பள்ளிக்கூடத்துக்கு விருது

நாங்குநேரி அருகே வாகைகுளம் (மூன்றடைப்பு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்துள்ளது.

Update: 2022-12-03 20:00 GMT

இட்டமொழி:

தமிழ்நாடு அளவில் மாவட்டத்திற்கு மூன்று சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து விருது வழங்கியதில் நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம் வாகைகுளம் (மூன்றடைப்பு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருதினை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். அதைத்தொடர்ந்து நாங்குநேரி வட்டாரக்கல்வி அலுவலர் சங்கீதா, பள்ளி தலைமை ஆசிரியை லிஸி, உதவிஆசிரியை கனகா ஆகியோர் நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா ஆரோக்கிய எட்வினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்