சமத்துவபுரத்தில் வீடுகள் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

சமத்துவபுரத்தில் வீடுகள் பெற பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

Update: 2023-06-13 18:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், வடுகப்பட்டி கிராம ஊராட்சியில், 2001-ம் ஆண்டு பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டது. இதில் வீட்டு எண்- 75 (பிற்படுத்தப்பட்டவர்) மற்றும் வீட்டு எண்- 99 (இதரர்) ஆகிய வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. வடுகப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பயனாளிகள் தேர்வு செய்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகளில், பாதிக்கப்பட்ட பயனாளிகள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மகளிரை தலைமையாக கொண்ட குடும்பங்கள், முன்னாள் ராணுவத்தினா், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கொண்ட குடும்பங்கள், திருநங்கைகள், எச்.ஐ.வி. எய்ட்ஸ், காசநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், வெள்ளம் மற்றும் தீ போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் பரம ஏழை குடும்பங்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேற்படி வீடுகள் பிற்படுத்தப்பட்டோர்-1, இதரர்-1 மட்டுமே தோ்வு செய்ய வேண்டியிருப்பதால், மேற்படி வகுப்பினை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை எழுத்து மூலமாக தற்போது குடியிருக்கும் தெளிவான முகவரியினை குறிப்பிட்டு, சாதி சான்றிதழ், ஆதார் நம்பர், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் வருகிற 16-ந் தேதி (வௌ்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் விராலிமலை வட்டார வளா்ச்சி அலுவலாிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். பயனாளிகளின் ேதர்வை பொறுத்தவரை தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது. விண்ணப்பிப்பதன் வாயிலாக மட்டுமே, வீடுஒதுக்கீடு செய்திட எந்த ஒரு முன்னுரிமையும் கோர இயலாது என கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்