கோவில்பட்டி தபால் அலுவலகம் முன்புஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
கோவில்பட்டி தபால் அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கோட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு பொதுத்துறை ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சுப்புராஜ் தலைமை தாங்கினார்.
போராட்டத்திற்கு கோட்டச் செயலாளர் பி.தவமணி, நிதிச் செயலாளர் எம்.தர்மராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூன்றாம் பிரிவு ஊழியர் சங்கம் ஏ.அருள்ராஜ், நான்காம் பிரிவு ஊழியர் சங்கம் தங்கராஜ், கிராமப்புற அஞ்சலக ஊழியர் சங்கம் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கையில் வலியுறுத்தி பேசினா் இதில் திரளான தபால் ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.