கயத்தாறு யூனியன் அலுவலகம் முன்புவிவசாய தொழிலாளர்கள் போராட்டம்

கயத்தாறு யூனியன் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-08-22 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு யூனியன் பகுதியில் 100 நாள் வேலை திட்ட விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி கயத்தாறு யூனியன் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், கயத்தாறு ஒன்றிய செயலாளர் சாலமன்ராஜ், தமிழ்நாடு விவசாயசங்க ஒன்றிய செயலாளர் சீனி பாண்டியன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அஸ்மத் மற்றும் சங்க நிர்வாகிகள், விவசாய தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை யூனியன் அலுவலகத்தில் எம்.எல்.ஏ. தலைமையில் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்