பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பீ்டி தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-30 12:08 GMT

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் காத்தவராயன் தலைமை தாங்கினார். செயலாளர் நாகேந்திரன், பொருளாளர் காசி, உதவி பொது செயலாளர் சரவணன், நிர்வாகி குப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பீடி தொழிலாளர் சம்மேளன தலைவர் ராமச்சந்திரன், சம்மேளன பொதுச்செயலாளர் திருச்செல்வன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், பீடி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற பீடி தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும். பீடி மீது விதித்துள்ள 28 சதவீத ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். பீடி தொழிலாளர்களுக்கு வீடுகட்டும் திட்டத்தில் மத்திய அரசு ரூ.3 லட்சம், மாநில அரசு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்