நள்ளிரவில் சாக்லெட் தொழிற்சாலைக்குள் நுழைந்து 2 கிலோ சாக்லெட்டை ருசி பார்த்த கரடி...

குன்னூரில் சாக்லெட் தொழிற்சாலைக்குள் கரடி ஒன்று நுழைந்து அங்கிருந்த சாக்லெட்டுகளை ருசி பார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Update: 2022-09-29 09:24 GMT

நீலகிரி,

கண்களைக் கவரும் அழகிய மலைத்தொடர்களையும், பசுமை நிறைந்த தேயிலை தோட்டங்களையும் கொண்ட நீலகிரி மாவட்டம், அதன் இயற்கை அழகுக்காக மட்டுமின்றி அங்கு தயாரிக்கப்படும் ஹோம்மேட் சாக்லெட்டுகளுக்காகவும் புகழ் பெற்று விளங்குகிறது. பல்வேறு ஊர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், நீலகிரியில் கிடைக்கும் ஹோம்மேட் சாக்லெட்டுகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில், சாக்லெட் தொழிற்சாலைக்குள் கரடி ஒன்று நுழைந்து அங்கிருந்த சாக்லெட்டுகளை ருசி பார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் அந்த தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன.

ஆள் அரவமற்ற நள்ளிரவு நேரத்தில் நுழைவு வாயிலை எகிரி குதித்து தொழிற்சாலைக்குள் புகுந்த அந்த கரடி, அங்கிருந்த சுமார் 2 கிலோ எடை கொண்ட சாக்லெட்டுகளை ஆற அமர உட்கார்ந்து ருசி பார்த்தது. சிறிது நேரம் அங்கு சுற்றித் திரிந்து விட்டு, பின்னர் அந்த கரடி அங்கிருந்து சென்றுள்ளது. கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ள நிலையில், வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்