தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்நோயாளிகள் வசதிக்காக பேட்டரி கார்

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நோயாளிகள் வசதிக்காக ரூ.3 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான புதிய பேட்டரி கார் அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2022-08-29 13:28 GMT

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நோயாளிகள் வசதிக்காக ரூ.3 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான புதிய பேட்டரி கார் அரசு சார்பில் வழங்கப்பட்டு உள்ளது.

பேட்டரி கார்

தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின் பயன்பாட்டுக்காக பேட்டரி கார்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். இதில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கும் ரூ.3 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான ஒரு பேட்டரி கார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரி கார் நேற்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தது. இந்த பேட்டரி காரை ஆஸ்பத்திரி டீன் (பொறுப்பு) ராஜேந்திரன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் பெற்றுக் கொண்டு, அதன் செயல்பாடுகளை பார்வையிட்டனர்.

நோயாளிகள்

இந்த பேட்டரி கார், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு அழைத்து செல்ல பயன்படுத்தப்பட உள்ளது. நோயாளிகள் பல்வேறு பரிசோதனைகளுக்காகவும், சிகிச்சைக்காகவும் நடந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் நோயாளிகளுக்கு ஏற்படும் சிரமங்களை போக்கும் வகையில் இந்த வாகனம் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த பேட்டரி காரில் ஸ்டெச்சர் போன்ற வசதி இருப்பதால் நடக்க முடியாக நோயாளிகளையும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எளிதாக அழைத்து செல்ல முடியும். இந்த பேட்டரி காரின் சேவை ஓரிரு நாளில் நோயாளிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்