மதுக்கடைகள் மூடப்படும்

மதுக்கடைகள் மூடப்படும்

Update: 2023-08-13 18:45 GMT

திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் உத்தரவின்படி நாளை(செவ்வாய்க்கிழமை) சுதந்திரதின விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மதுபானக்கூடங்கள், மதுபானக்கூடங்கள் இல்லாமல் இயங்கும் அரசு சில்லறை விற்பனை மதுபான கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானம் அருந்தும் கூடங்கள் அனைத்திலும் நாளை மதுபானங்களை விற்பனை செய்ய கூடாது. மேலும் மதுபானக்கடைகளை மூடவும் ஆணையிடப்படுகிறது. அரசு ஆணையை செயல்படுத்த தவறும் பட்சத்தில் தொடர்புடைய கடைகளின் உரிைமதாரர் மற்றும் சில்லறை மதுபானக்கடைகளின் மேற்பார்வையாளர்கள் மீது உரிய விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்