போலீஸ் சூப்பிரண்டாக பாரகர்ல சிபாஸ் கல்யாண் பொறுப்பேற்பு
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பாரகர்ல சிபாஸ் கல்யாண் நியமிக்கப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த டாக்டர் வருண்குமார் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக அமலாக்க பிரிவுக்கு மாற்றம் செய்து உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டார்.
எனவே, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த பாரகர்ல சிபாஸ் கல்யாண் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை அவர் திருவள்ளூர் மாவட்ட அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீசார் பூங்கொத்து வழங்கி வரவேற்பு அளித்தனர்.