முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க கூட்டம்

முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க கூட்டம் நடந்தது.

Update: 2023-07-04 18:48 GMT

ஜெயங்கொண்டம்:

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் பொதுக்கூட்டம், ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாநில பிரதிநிதிகள் சுந்தர்ராஜன், துரை, பொன்பரப்பி குணசேகரன், மாநில அணி அமைப்பாளர் கவுசல்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில், வருகிற 2024-ம் ஆண்டு மருத்துவர் சமூகத்திற்கு மாவட்ட சங்கம் அமைப்பதற்கு சொந்த இடம் வாங்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வின் காரணமாக முடி திருத்தும் தொழில் கட்டணத்தை உயர்த்தி மாவட்ட சங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி முடி திருத்தம் மட்டும் 120 ரூபாய், சேவிங் மட்டும் 70 ரூபாய், தாடி ஒதுக்குதல் மட்டும் 100 ரூபாய், தலை முடி டை அடித்தல் 150 ரூபாய் என்று தீர்மானிக்கப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்