பி.ஏ.பி. நீர் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் நிறைவேறும் வரை இயங்க வேண்டும்

பி.ஏ.பி. நீர் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் நிறைவேறும் வரை இயங்க வேண்டும் என்று ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-06-28 16:17 GMT

பொள்ளாச்சி

பி.ஏ.பி. நீர் பாதுகாப்பு கூட்டமைப்பு ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் நிறைவேறும் வரை இயங்க வேண்டும் என்று ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகள் கூட்டம்

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல ரூ.930 கோடியில் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து பரம்பிக்குளம்-ஆழியாறு நீர் பாதுகாப்பு கூட்டமைப்பு (பி.ஏ.பி.) உருவாக்கப்பட்டது. மேலும் கடந்த 27-ந்தேதி ஆர்ப்பாட்டம், கடையடைப்பு நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் அரசு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே தென்சங்கம்பாளையத்தில் ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன நலச்சங்க விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.

அடுத்தக்கட்ட போராட்டம்

கூட்டத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தை நீர் ஆதாரமாக கொண்டு ஆழியாற்றில் இருந்து தண்ணீரை கொண்டு சென்று ஒட்டன்சத்திரத்தில் செயல்படுத்த உள்ள கூட்டுக்குடிநீர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த 27-ந்தேதி நடைபெற இருந்த ஆழியாறு, திருமூர்த்தி பாசன சங்கம் ஆகியோரை உள்ளடக்கிய பரம்பிக்குளம்-ஆழியாறு நீர் பாதுகாப்பு கூட்டமைப்பை உருவாக்கி, அதற்கு தொழில் வர்த்தக சபை, வணிகர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் ஆதரவை பெற்று தந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்திற்கு நன்றி தெரிவிப்பது,

1-ந்தேதி அரசு நியமித்த அமைச்சர்களுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள கூட்டமைப்பு ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் நிறைவேறும் வரை தொடர்ந்து இயங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்