பனியன் நிறுவன மேற்பார்வையாளர் கைது

தொழிலாளர்களின் சம்பளத்தில் முறைகேடு செய்த பனியன் நிறுவன மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-06 16:33 GMT

பட்டிவீரன்பட்டி அருகே ஒட்டுப்பட்டியில் தனியார் பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் கிளை, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணியில் உள்ளது. அதில் சோழவந்தானை சேர்ந்த கார்த்திக் (வயது 26) என்பவர் உதவி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அந்த கிளையின் அலுவலகத்தில், ஒட்டுப்பட்டி தொழிற்சாலையில் இருந்து அலுவலர்கள் சென்று திடீர் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது செக்கானூரணி நிறுவனத்தில் கடந்த 1 வருடமாக பணிபுரிந்துவிட்டு இடையில் நின்ற தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய சம்பள பாக்கியை, அவர்களிடம் கொடுத்துவிட்டதாக கூறி ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை உதவி மேற்பார்வையாளர் கார்த்திக் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில், பனியன் நிறுவனத்தின் மேற்பார்வையாளர் ஜெகநாதன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முறைகேட்டில் ஈடுபட்ட கார்த்திக்கை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்