போடியில் அ.ம.மு.க. பேனர் அகற்றம்
போடியில் அ.ம.மு.க. பேனர் அகற்றப்பட்டது.
போடி பஸ் நிலையத்தில், தேவர் சிலை அருகே நேற்று காலை அ.ம.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அனுமதியின்றி பேனர் வைத்ததாக அந்த பேனரை போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
இதுகுறித்து அறிந்த அ.ம.மு.க. நகர செயலாளர் ஞானவேல் தலைமையிலான கட்சியினர் சம்பவ இடத்துக்கு வந்து, பேனரை அகற்றிய நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அதிகாரிகள் பேனரை அங்கிருந்து அகற்றினர். இந்த சம்பவத்தால் போடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.