பொதுத்துறை வங்கிகளை தனியாரிடம் விற்பனை செய்யக் கூடாது. கூட்டுறவு வங்கிகளை மாநில அரசிடமிருந்து பறிக்கக் கூடாது. கிராம வங்கியில் உள்ள பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கை விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தினர் பிரசார பயணம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 19-ந்தேதி தூத்துக்குடியில் தொடங்கிய பிரசாரம் விருதுநகரை வந்தடைந்தது. இப்பயணத்திற்கு தேசபந்து மைதானத்தில் பல்வேறு தொழிற்சங்கத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு எல்.ஐ.சி ஊழியர் சங்கத்தின் தலைவர் பவளவண்ணன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட இணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் வேலுச்சாமி, தட்சின ெரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் ஜெயராமன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.