கார் மோதி வங்கி ஊழியர் படுகாயம்
கார் மோதி வங்கி ஊழியர் படுகாயம் அடைந்தார்.;
சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா பத்தினம்பட்டி அருகே உள்ள மேல் காண்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குணா (வயது 21). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில், குணா தனது மோட்டார் சைக்கிளில் பழனிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நாணப்பரப்பு பிரிவு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலக்குறிச்சி பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் என்பவர் ஓட்டி வந்த கார், குணா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குணா படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விபத்தை ஏற்படுத்திய மகேஷ்குமார் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, அவர் ஓட்டி வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.