நெல்லை அருகே ராமையன்பட்டி சிவாஜிநகரை சேர்ந்தவர் அணைத்தலை (வயது 52). இவர் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மதியம் சாப்பிட சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.