பந்தலடி, பஸ் நிலைய பகுதிகளை ஒருவழிபாதையாக மாற்ற வேண்டும்

மன்னார்குடி பந்தலடி, பஸ் நிலைய பகுதிகளை ஒருவழிபாதையாக மாற்ற வேண்டும் நுகர்வோர்-சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்

Update: 2022-07-05 17:32 GMT

மன்னார்குடி:

மன்னார்குடி நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க பொதுக்குழு கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ரமேஷ், இணை செயலாளர்கள் சம்பத், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராமசாமி வரவேற்றார். கூட்டத்தில் பொருளாளர் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நகரின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை நிவர்த்தி செய்ய வேண்டும். பந்தலடி, பஸ் நிலைய பகுதிகளை ஒருவழிபாதையாக மாற்ற வேண்டும். பந்தலடி பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நான்கு புறமும் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் துணைத்தலைவர் ரத்தினசபாபதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்