விதிகளை மீறிய 6 கடைகளில் உரம் விற்பனைக்கு தடை

விதிகளை மீறிய 6 கடைகளில் உரம் விற்பனைக்கு அதிகாரிகள் தடை விதித்தனர்.

Update: 2022-10-21 18:42 GMT

திருப்பத்தூர்

விதிகளை மீறிய 6 கடைகளில் உரம் விற்பனைக்கு அதிகாரிகள் தடை விதித்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) பாலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் உரக்கட்டுப்பாடு சட்டத்தினை மீறிய 6 உர விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 14 நாட்கள் முதல் 21 நாட்கள் வரை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்களை மாவட்ட நிர்வாகம் பெற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர நிலையங்களில் இருப்பு வைத்துள்ளது. உர விற்பனை நிலையங்களில் அதிகபட்ச சில்லரை விலைக்கு மிகாமல் உர மூட்டைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் விலைப்பட்டியல் இருப்பு விபர பலகையில் விவசாயிகளுக்கு தெரியும் வண்ணம் வைத்திருக்க வேண்டும். விற்பனை செய்யப்படும் உரங்களுக்கான உரிய ரசீதை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

உரிய அனுமதியின்றி வெளி மாவட்டங்களுக்கு உரங்களை விற்கவோ, மாற்றம் செய்யவோ கூடாது என்பது உள்பட பல்வேறு விதிமுறைகளை பின்பற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உரங்களை பதுக்கி தட்டுப்பட்டை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்