நெல்லையில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த தடை

நெல்லையில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-09-02 19:44 GMT

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) பிரவேஸ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

சென்னை மாநகர போலீஸ் சட்டம் 1997 பிரிவு 41 (2)-ன் படி நெல்லை மாநகர பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 17-ந்தேதி வரை 15 நாட்கள் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, தர்ணா நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பொது அமைதி, மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்