முத்துமாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்

விக்கிரவாண்டி முத்துமாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடங்களை சுமந்து ஊர்வலமாக சென்றனர்.

Update: 2023-08-18 18:45 GMT

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று சாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அங்குள்ள நல்ல தண்ணீர் குளத்தில் பக்தர்கள் ஒன்று திரண்டு பூங்கரகம் ஜோடித்து, பூஜை நடத்தினர். பின்னர் பம்பை, உடுக்கை வாத்தியம் இசைக்க 108 பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் முத்துமாரிஅம்மனுக்கும், கிராம தேவதையான துர்க்கையம்மனுக்கும் பால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் தயிர், தேன், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை 5-ம் வெள்ளி உற்சவதாரர்கள் கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் முன்னின்று செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்