மயூரநாதர் கோவிலில் பால்குட விழா
மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் பால்குட விழா நடந்தது
மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பால்குடவிழா நடந்தது. முன்னதாக காவிரி கரையில் இருந்து பக்தர்கள் பால் குடங்கள் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் மயூரநாதர் சாமிக்கும் அபயாம்பிகை அம்மனுக்கும் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது. துலாக்கட்ட காவிரி கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றனர். தொடர்ந்து மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது.