பெரிய மாரியம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி பால்குடம் ஊர்வலம்

Update: 2023-03-06 20:51 GMT

ஓமலூர்:-

ஓமலூரை அடுத்த தீவட்டிப்பட்டியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் தேரோட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கிய பால்குட ஊர்வலம் முக்கிய பகுதிகள் வழியாக பெரிய மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து சாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) கூழ் பானை அழைத்தலும், நாளை (புதன்கிழமை) அம்மன் ஊர்வலம், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதலும் நடக்கிறது.

நாளை மறுநாள் மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கி நடு ஊரில் நிலை நிறுத்தப்படும். 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடு ஊரில் இருந்து தேர் இழுக்கப்பட்டு அரசமரம் வழியாக கோவிலை வந்தடையும். 11-ந் தேதி (சனிக்கிழமை) மாலை சத்தாபரணமும், 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் உடையார் ராஜி, கவுண்டர் கிருஷ்ணன், நாயக்கர் அருள், தர்மகர்த்தா கோபிநாத் மற்றும் பெரிய தனத்துகாரர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்