முத்துமாரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம்

வயலோகம் முத்துமாரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-04-14 19:34 GMT

அன்னவாசல் அருகே உள்ள வயலோகத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி முத்துமாரியம்மன் கோவிலுக்கு நிலையைப்பட்டியில் உள்ள வெள்ளாற்றிலிருந்து நிலையப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள அண்ணா நகர், முதலிப்பட்டி, காந்திபட்டி, வயலோகம், அகரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு சென்றனர். பின்னர் பக்தர்கள் கொண்டு சென்ற பாலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த அக்னி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் முத்துமாரியம்மனை தரிசனம் செய்தனர். அன்னவாசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்