பாபநாசம் கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி

பாபநாசம் கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-12-14 20:02 GMT

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் லோகநாயகி சமேத பாபவிநாசர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2005-ம் ஆண்டு நடந்தது. அதன் பின்னர் சுமார் 17 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. எனவே கோவிலில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து பாலாலயம் நடத்துவதற்கு அனுமதியளித்தது.

பாலாலயத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பாலாலய நாளான நேற்று காலை 7 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை, 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் பாலாஸ்தாபன தீபாராதனை நடைபெற்றது. இதில் அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, கோவில் நிர்வாக அதிகாரி போத்தி செல்வி, திருவாடுதுறை ஆதீன ஆய்வாளர் சொரிமுத்து, கோவில் மணியம் செந்தில் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்