கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம்

புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் நடந்தது.

Update: 2023-02-16 18:30 GMT

புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 13 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதன் காரணமாக தற்போது கும்பாபிஷேகம் மார்ச் மாதம் 27-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று கோவிலில் பாலாலயம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் சிவாச்சாரியார்கள் யாகசாலை அமைத்து சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கோவில் திருப்பணிக்குழு தலைவரும், நகராட்சித்தலைவருமான சேகர் என்கிற குணசேகரன், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையாளர் நந்தகுமார், அறநிலையத்துறை அதிகாரி விவேக், திருப்பணிக் குழுவினர், நகராட்சி கவுன்சிலர்கள், கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்