வண்டியூர் ஆஞ்சநேயர் கோவிலில் பாலாலய பூஜை

வண்டியூர் ஆஞ்சநேயர் கோவிலில் பாலாலய பூஜை நடந்தது.

Update: 2022-09-12 20:25 GMT

அழகர்கோவில்,

கள்ளழகர் கோவிலின் உப கோவிலானது மதுரை வண்டியூர் - அனுமார்பட்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் ஆகும்.இந்த கோவிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு பாலாலய பூஜைகள் தொடங்கியது. இதையொட்டி கோவில் உள் பிரகாரத்தில் புனித கும்பகலசங்கள், பூஜை மலர்கள் வைத்து பட்டர்களின் வேத மந்திரங்கள், மேளதாள இசையுடன் யாகசாலை பூஜைகள், மற்றும் பாலாலய பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து கோவிலில் கிழக்கு மற்றும் தென் பகுதியில் சுற்றுச்சுவர் கட்டி மாணிக்கப்பட்டை பூசுவது, சிமெண்ட் தளம், கல் தளம், மராமத்து சீரமைக்கும் பணிகள், மூலஸ்தானம் கட்டுமான பணிகள், அர்த்த மண்டபம், கிரானைட் தளம் அமைப்பது, உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் ரூ.30 லட்சம் மதிப்பில் தொடங்கி உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், உதவி பொறியாளர்கள், உள்துறை, கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்