பேக்கரி ஊழியருக்கு ஆயுள் தண்டனை

தொழிலாளியை கழுத்்தை அறுத்து கொலை செய்த வழக்கில் பேக்கரி ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2023-09-26 20:00 GMT

ஊட்டி

தொழிலாளியை கழுத்்தை அறுத்து கொலை செய்த வழக்கில் பேக்கரி ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தொழிலாளி

நீலகிரி மாவட்டம் ஊட்டி நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 44), தொழிலாளி. மேலும் இவர் பாரம் தூக்கும் சங்க செயலாளராக இருந்தார். கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த தேவதாஸ் (40). இவர் ஊட்டியில் உள்ள பேக்கரியில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

கடந்த 24-3-2020 அன்று ஜோதிமணி மற்றும் அவரது நண்பர் முகமது செய்யது ஆகியோர் ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள நாராயணன் என்பவரின் கடையில் சாப்பிட்டு கொண்டு இருந்தனர். அப்போது அங்கு, தேவதாசும் வந்தார். இந்த நிலையில் தேவதாஸ் கை, முகம் கழுவிய போது ஜோதிமணி மீது தண்ணீர் தெரித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கேரளா சென்று வந்ததால் கொரோனா வைரஸ் பரவலுக்கு தேவதாஸ் காரணம் என்றும், எனவே தள்ளி செல்லுமாறும் ஜோதிமணி கூறியதாக தெரிகிறது.

ஆயுள் தண்டனை

இதில் ஆத்திரமடைந்த தேவதாஸ், வெங்காயம் அறுத்து கொண்டிருந்த கத்தியை எடுத்து ஜோதிமணியின் கழுத்தை அறுத்து உள்ளார்.

இதில், ஜோதிமணி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் ஜோதிமணியை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்நிரிக்கு கொண்டு செல்லும் வழியில், ஜோதிமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ஊட்டி மத்திய போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயபால் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவதாசை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஊட்டி மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதன்படி குற்றம் சாட்டப்பட்ட தேவதாசுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.500 அபராதம் விதித்து மாவட்ட நீதிபதி அப்துல் காதர் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆனந்தன் ஆஜராகி வாதாடினார்.

இதைத் தொடர்ந்து போலீசார் தேவதாசை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்