பேய்க்குளம், தச்சமொழி கோவிலில் சிறப்பு திருவிளக்கு பூஜை
பேய்க்குளம், தச்சமொழி கோவிலில் சிறப்பு திருவிளக்கு பூஜை நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் சங்கரநயினார்புரம் சங்கரலிங்க சுவாமி உடனுறை கோமதி அம்மாள் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பெண்கள் பங்கேற்று திருவிளக்கு ஏற்றி பக்தி பாடல்கள் பாடி சுவாமி, அம்பாளை வழிப்பட்டனர். பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி பிரகார வீதியில் உலா வந்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டுசாமி தரிசனம் செய்தனர்.
சாத்தான்குளம் தச்சமொழி முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் திரளாக பங்கேற்று திருவிளக்கு ஏற்றி பக்தி பாடல்கள் பாடி அம்பாளை வழிப்பட்டனர். அம்பாளுக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.