சிறுவர்கள் பட்டாசு வெடித்ததில் ரேஷன்கடையில் அரிசி, கோதுமை மூட்டைகள் எரிந்தன

சிறுவர்கள் பட்டாசு வெடித்ததில்ரேஷன்கடையில் அரிசி, கோதுமை மூட்டைகள் எரிந்தன.

Update: 2022-10-25 17:02 GMT

ஆரணி

சிறுவர்கள் பட்டாசு வெடித்ததில்ரேஷன்கடையில் அரிசி, கோதுமை மூட்டைகள் எரிந்தன.

ஆரணியை அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் உள்ள ரேஷன்கடை அருகாமையில் சிறுவர்கள் சிலர் தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்துள்ளனர். அந்த பட்டாசுகள் பூட்டி கிடந்த ரேஷன் கடை இருப்பு அறையில் வெடித்து சிதறியதில் அரிசி, கோதுமை மூட்டைகளில் தீப்பிடித்து உள்ளதாக தெரிகிறது.

சிறிது நேரம் கழித்து கடையிலிருந்து கரும்புகை வெளிவரவே பகுதி பொதுமக்கள் உடனடியாக ரேஷன் கடை ஊழியரான சரவணனுக்கு தகவல் அளித்தனர்.

அவர் கடையில் வந்து திறந்து பார்க்கும் போது அங்கிருந்த அரிசி கோதுமை மூட்டைகள் கோணிப்பை எரிந்த நிலையில் காணப்பட்டது. பின்னர் தீ மேலும் பரவாமல் தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்