பொக்லைன் எந்திர ஆபரேட்டர் கைது

வாலிபரை தாக்கிய பொக்லைன் எந்திர ஆபரேட்டர் கைது

Update: 2023-05-27 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே பொன்னங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வீரபுத்திரன் மகன் வினோத் (வயது 28). இவர் ராகவன்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் சாமி ஊர்வலத்தை பார்க்கச்சென்றார். அப்போது அவர் தனது நண்பர் பொக்லைன் எந்திர ஆபரேட்டரான அதே பகுதியைச் சேர்ந்த சூரியதேவ் (26) என்பவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது வினோத், சூரியதேவை விளையாட்டாக அடித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சூரியதேவ், என்னை எதற்காக அடித்தாய் எனக்கேட்டு வினோத்தை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து வினோத், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியதேவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்