முதுகுத்தண்டுவடம் காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பு முகாம்

கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் முதுகுத்தண்டுவடம் காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பு முகாம் 23-ந் தேதி நடக்கிறது

Update: 2023-03-15 20:25 GMT

தஞ்சாவூர்,;

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-முதுகுத்தண்டுவடம் காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பு முகாம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 23-ந் தேதி நடந்தது. முகாமில் 51 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் பிசியோதெரபி, அலட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் ரத்தபரிசோதனை செய்யப்பட்டு, நரம்பியல் டாக்டரிடம் 43 பேரும், கண் டாக்டரிடம் 32 பேரும், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை டாக்டரிடம் 12 பேரும் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றனர்.அன்றைய தினமே 3 பேர் தொடர் சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனர். 2-ம் கட்டமாக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சிறப்பு முகாமில் 17 பேர் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றனர். 3-ம் கட்டமாக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் வருகிற 23-ந் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் எலும்புமுறிவு சிகிச்சை, மூளை நரம்பியல் மருத்துவம் மற்றும் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்கு சிறப்பு நிபுணர்கள் சிகிச்சை அளிக்க உள்ளனர்.மறுவாழ்வு குறித்த ஆலோசனைகள் தகுந்த ஆலோசகர்களால் வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பை முதுகுத்தண்டுவடம் காயம் அடைந்தவர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்