பி.ஏ.பி. வாய்க்காலில் மிதந்த ஆண் பிணம்-யார் அவர்? போலீஸ் விசாரணை

பி.ஏ.பி. வாய்க்காலில் மிதந்த ஆண் பிணம்-யார் அவர்? போலீஸ் விசாரணை

Update: 2023-04-07 18:30 GMT

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஆவின் பாலகம் பின்புறம் உள்ள பி.ஏ பி.மெயின் வாய்க்கால் சுரங்கத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதந்தது. இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்துகிடந்தவர் கருப்பு நிற கோடுபோட்ட வெள்ளை நிற அரைக்கை சட்டை அணிந்துள்ளார். இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்