அய்யா வைகுண்டர் அவதார விழா
கோவில்பட்டி பூமாதேவி கோவிலில் அய்யா வைகுண்டர் அவதார விழா நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் பிரசித்தி பெற்ற பூமாதேவி ஆலயம் சித்தர் பீடத்தில் அய்யா வைகுண்டர் அவதார விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. 7.36 மணிக்கு அம்பாள் குருநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அய்யா வைகுண்டருக்கு சிறப்பு பணிவிடை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.