அய்யா வைகுண்டர் அவதார தின வாகன வீதி உலா

நெல்லையில் அய்யா வைகுண்டர் அவதார தின வாகன வீதி உலா நடைபெற்றது.

Update: 2023-03-03 20:23 GMT

அய்யா வைகுண்டரின் 191-வது அவதார தின விழா இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நெல்லையில் உள்ள பல்வேறு தர்மபதிகள், நிழல் தாங்கல்களில் சிறப்பு விழாக்கள் நடைபெறுகின்றன.

நெல்லை டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் உள்ள நாராயணசாமி கோவில், வைகுண்டர் தர்மபதியில் நேற்று அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி உகப்படிப்பு, பால் அன்னதர்மம் வழங்கப்பட்டது. மதியம் உச்சிப்படிப்பு, ஏக மகா அன்னதர்மமும் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு 2 சப்பரங்களில் அய்யா வாகன வீதி உலா 4 ரதவீதிகளில் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம், பகுதி செயலாளர் மணப்படை மணி, அய்யாவழி பாலமுருகன், பவானி வேல்முருகன், தர்மபதி நிர்வாகி மாணிக்கம் மற்றும் பதிபண்டாரங்கள், பணிவிடையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்