ஆயுத பூஜை விடுமுறை: மின்சார ரெயில்கள் ஞாயிறு கால அட்டவணைப்படி இயங்கும்

ஆயுத பூஜை விடுமுறை: மின்சார ரெயில்கள் ஞாயிறு கால அட்டவணைப்படி இயங்கும் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.;

Update: 2022-10-02 18:44 GMT

சென்னை,

ஆயுத பூஜையை முன்னிட்டு வருகிற 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) விடுமுறை நாளாக இருப்பதால், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி, சென்டிரல்-அரக்கோணம், சென்டிரல்-சூலூர்பேட்டை ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்