அய்யா வைகுண்டர் அவதார தினத்தைஅரசு விடுமுறையாக அறிவிக்க கோரிக்கை

அய்யா வைகுண்டர் அவதார தினத்தை அரசு விடுமுறையாக அறிவிக்க கோரிக்கை வேண்டும் என்று திருச்செந்தூர் அவதாரபதி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-01-09 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தலைமை தாங்கினார். செயலாளர் பொன்னுத்துரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரவு செலவு கணக்கு வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது.

மேலும் மாசி 20-ந்தேதி நடைபெறும் அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை மிக சிறப்பாக கொண்டாட வேண்டும். இந்த விழாவையொட்டி தமிழக அரசு அறிவித்துள்ள வரையறுக்கப்பட்ட விடுமுறையை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை சட்ட ஆலோசகர் வக்கீல் சந்திரசேகரன், பொருளாளர் ராமையா நாடார், துணைத்தலைவர் அய்யாபழம், இணை தலைவர்கள் பால்சாமி, பேராசிரியர் விஜயகுமார், ராஜதுரை, கோபால் நாடார், இணை செயலாளர்கள் வரதராஜ பெருமாள், ராதாகிருஷ்ணன், செல்வின், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முத்துக்குட்டி ஆதிநாராயணன், ராமகிருஷ்ணன், சிவாஜி, கார்த்தீசன், உறுப்பினர்கள் பரதராஜன், பாண்டியராஜா, வேல்முருகன், பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்