நெல்லை அருகே சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளியில் இந்திய அரசு நேரு யுவகேந்திரா சார்பில் அரசியல் அமைப்பு குடிமையியல் பற்றிய விழிப்புணர்வு பயிலரங்கம் நடந்தது. பள்ளி செயலாளர் மற்றும் இந்தியா சிமெண்டு ஆலை முதுநிலை மனிதவள மேலாளர் நாராயணசாமி தலைமை தாங்கினார். நேரு யுவகேந்திரா மாரியப்பன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், உதவி தலைமை ஆசிரியர் ரெங்கநாதன், ஆலை தொழிற்சங்க செயலாளர் சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிலரங்கில், நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி பொறுப்பாளர் கார்த்திக், சங்கர் மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் கணபதி சுப்பிரமணியன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் உடையார், சீதாலட்சுமி உள்ளிட்டவர்கள் கருத்துரை வழங்கினார்கள்.
இந்திய அரசியல் அமைப்பு குறித்து மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட நீதிபதி சமீனா பரிசுகள் வழங்கி பாராட்டினார். முடிவில், நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி பொறுப்பாளர் சங்கர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஞானச்சந்திரன் செய்திருந்தார்.