போடியில் சிறுதானியங்களின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

போடியில் சிறுதானியங்களின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-09-12 21:15 GMT

உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சிறுதானியங்கள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் போடியில் நடைபெற்றது. இதற்கு போடி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சரண்யா தலைமை தாங்கினார். போடி ஜ.கா.நி. மேல்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம், போடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. இதில், பள்ளி மாணவர்கள், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்