காற்று மாசுபடுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
காற்று மாசுபடுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
காற்று மாசுபடுவதை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் திருச்சியில் நடந்தது. ஆர்.சி. பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தில் 12 பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, போலீஸ் உதவி கமிஷனர் கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் காற்று மாசுபடுவதை தடுப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி சென்றனர். மேலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.