மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்

தேசூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-01-23 14:35 GMT

சேத்துப்பட்டு

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தெள்ளார் வட்டார வள மையத்தின் சார்பாக 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ முகாம் வருகிற மார்ச் மாதம் 1-ந் தேதி தெள்ளார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.

இதுகுறித்து விழிப்புணர்வு ஊர்வலம் தேசூர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. ஊர்வலத்தை தலைமை ஆசிரியை ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் தே.ஜெயசீலன், தேசூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அனந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பாசிரியர்கள், தசைப்பயிற்சியாளர், ஆயத்த பயிற்சி மைய பொறுப்பாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி, மற்றும் போலீசார், மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு ஆசிரியர்கள் பூங்காவனம், கோவிந்தராஜ், மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி,

இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் காயத்ரி, திவ்யா, புதிய பாரத எழுத்தறிவு ஆசிரியர் சரஸ்வதி, மகளிர் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், ஓவிய ஆசிரியர் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர் மாலா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் ரவிகுமார், மாற்றுத்திறனாளிகளின் பகுதி நேர பராமரிப்பாளர்கள் வசந்தி, சித்ரா மற்றும் மாணவிகள்் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

தேசூரில் முக்கிய வீதியின் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தனர். ஊர்வலத்தில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் பாலாஜி நன்றி கூறினார்,

Tags:    

மேலும் செய்திகள்