இயற்கை வேளாண்மை குறித்து பஞ்சாயத்து தலைவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை குறித்து பஞ்சாயத்து தலைவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-06-24 12:32 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த காணொலி மூலம் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சிக்கு தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வேளாண்மை துணை இயக்குநர் (உழவர்பயிற்சிநிலையம்) க.ஜெயசெல்வின் இன்பராஜ் பேசினார். சிறப்பு அழைப்பாளாக கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல்வர் தேரடி மணி கலந்து கொண்டு இயற்கை வேளாண்மையின் கொள்கை மற்றும் விளைவுகள் குறித்து விளக்கி பேசினார். மண்ணியல் துறை போராசிரியர்மற்றும் தலைவர் எஸ்.சுரேஷ் அவர்கள் மண் வளம் மற்றும் இயற்கை வேளாண்மை மூலம் மேம்படுத்துவது குறித்தும், ஸ்காட் வேளாண்மை அறிவியியல் நிலையம் உழவியல் துறை தொழில் நுட்ப வல்லுநர் எ.முருகன் உழவியல் சார்ந்த தொழில்நுட்பம் குறித்தும், இயற்கை விவசாயி பா.அய்யாத்துரை இயற்கை வேளாண்மையில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு அதிக மகசூல் எடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கி கூறினார்.

பயிற்சியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள வேளாண்மைறை அலுவலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் வி.வெங்கடசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்