மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு
மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குன்னூர்,
குன்னூர் அருகே உபதலை அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் ஐயரின் ரெஜி தலைமையில் ஆசிரியர்கள் உபதலை அரசு பள்ளி சிறப்பு குறித்தும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை என அரசின் பல்வேறு சலுகைகளை கூறி பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். உபதலை சுற்றுவட்டார பகுதிகளான படித்தோட்டம், அம்பிகாபுரம், கக்கன் நகர், ஒசட்டி, நல்லப்பன் தெரு, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.