இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு

இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Update: 2022-09-03 19:15 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், இடைநின்ற மாணவர்களின் இருப்பிடங்களில் சென்று சந்தித்து கள ஆய்வுக்குழு மூலம் மீண்டும் பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி மகிமைபுரம் பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் குடியிருப்புகளுக்கு சென்று கள ஆய்வு நடத்தப்பட்டதில், 8 இடைநின்ற குழந்தைகள் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மேகலா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன், வட்டார ஒருங்கிணைப்பாளர் செந்தில், ஆசிரியர் பயிற்றுனர் அந்தோணிலூர்துசேவியர் மற்றும் அப்பகுதிக்கு உட்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய குழு மூலமாக அவர்களுக்கு கல்வி சார்ந்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர ஆலோசனை வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்