போதை பொருட்கள் விற்பனையை தடுக்க விழிப்புணர்வு ஸ்டிக்கர் போலீஸ் சூப்பிரண்டு ஒட்டினார்

ோதை பொருட்கள் விற்பனையை தடுக்க விழிப்புணர்வு ஸ்டிக்கரை போலீஸ் சூப்பிரண்டு ஒட்டினார்

Update: 2022-09-06 18:24 GMT

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை, கடத்தலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. போதை பொருட்கள் தொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால் மாவட்ட காவல் துறையின் பிரத்தியேக வாட்ஸ் அப் எண்ணில் (9092700100) தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வாட்ஸ்அப் எண் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வணிகர் சங்கமும், காவல்துறையும் இணைந்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் ஒட்டும் பணி வேலூர் லாங்கு பஜாரில் நேற்று நடந்தது. வணிகர் சங்க மாவட்ட தலைவர் ஞானவேலு, செயலாளர் ஏ.வி.எம்.குமார், துணைத் தலைவர் ரமேஷ்குமார், இளைஞரணி செயலாளர் அருண்பிரசாத் மற்றும் நிர்வாகிகள், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

முதல்கட்டமாக 2 ஆயிரம் ஸ்டிக்கர்கள் கடைகளில், வாகனங்களில் ஒட்டும் பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தொடங்கி வைத்தார். அவர் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களிலும், அங்குள்ள பல்வேறு கடைகளிலும் ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்