விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மற்றும் அருப்புக்கோட்டை வட்ட சட்ட பணிகள் குழு இணைந்து குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் சார்பு நீதிபதி ராமலிங்கம், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உமா மகேஸ்வரன் ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மநாபன், குற்றவியல் நீதிபதி முத்து இசக்கி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கலை நிலா, வழக்கறிஞர் சங்க தலைவர் ராம்குமார், செயலாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டனர்.
முன்னதாக குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்ற வேண்டும் என அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.