இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

பாண்டுகுடியில் இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2022-09-24 18:45 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா பாண்டுகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். அனைவரையும் அங்கன்வாடி பணியாளர் முருகேஸ்வரி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் மாலா, ஒருங்கிணைப்பாளர்கள் லீலாதேவி, அல்போன்ஸ், கிராம சுகாதார செவிலியர் மணிமேகலை, சுகாதார ஆய்வாளர் கண்ணன், பள்ளி ஆசிரியர்கள் ஆல்ட்ரின் சவரி ராஜ், அங்கம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது வளர் இளம் பெண்கள், காய்கறி, கீரைகள், பழங்கள் போன்று சத்தான உணவு வகைகளை உண்பதன் மூலம் ரத்த சோகையில் இருந்து விடுபட முடியும் என்றும் தன் சுத்தம், கை கழுவும் முறை, போன்ற பல்வேறு வகையான விழிப்புணர்வுகளை அளித்தனர்.. அங்கன்வாடி பணியாளர்கள் ராமு, தீபா, சூர்யா தனலெட்சுமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்