பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஆலங்குளம் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2022-07-05 17:06 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் ஒன்றியம் மாயமான்குறிச்சி ஊராட்சி குருவன்கோட்டை கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பஞ்சாயத்து துணை தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகராஜ், பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய எஸ்.பி.எம். ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் மற்றும் குருவன்கோட்டை இந்து தொடக்கப்பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் பஞ்சாயத்து நிர்வாகத்தின் சார்பாக மஞ்சள் பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் பஞ்சாயத்து தலைவர் பால்தாய் நன்றி கூறினார்.

* கிடாரகுளம் ஊராட்சி கிடாரகுளம் கிராமத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நவச்சிவாய முதலியார் நினைவு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட இந்த பேரணியை பஞ்சாயத்து தலைவர் சாந்தி ஆண்டி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரணியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய பதாகைகளை ஏந்தியபடி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு மஞ்சள் பை வினியோகம் செய்யப்பட்டது. பேரணியில் பள்ளி தலைமை ஆசிரியர் அருள் நாதன், பஞ்சாயத்து துணை தலைவர் மாதவி ஆனந்தராஜ், ஊராட்சி செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்