மகளிர் தின விழிப்புணர்வு பேரணி
மகளிர் தினத்தை முன்னிட்டு காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனை சார்பாக மகளிர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
காரைக்குடி
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு காரைக்குடி கே.எம்.சி மருத்துவமனை சார்பாக மகளிர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காரைக்குடி 5 விளக்குப்பகுதியிலிருந்து புறப்பட்ட பேரணிக்கு கே.எம்.சி. மருத்துவமனை சேர்மன் டாக்டர் காமாட்சி சந்திரன் தலைமை தாங்கினார். மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சலீம் முன்னிலை வகித்தார்.
பேரணியில், அழகப்பா உடற்கல்வி கல்லூரி, உமையாள ராமநாதன் மகளிர் கல்லூரி, பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி கல்லூரி தேவகோட்டை ஆனந்தா கல்லூரி, வித்யாகிரி கல்லூரி ராமசாமி தமிழ் கல்லூரி, கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கல்லூரி, மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மகரிஷி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் மாணவர்கள் 800-க்கும் மேற்பட்டவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியை காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஐந்து விளக்கு பகுதியில் தொடங்கிய பேரணி கண்ணதாசன் மணி மண்டபத்தை அடைந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் திராவிட மணி, செயலாளர் கண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட மாணவ -மாணவிகள் மகளிர் தின விழிப்புணர்வு குறித்த கருத்துகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய படியும் முழக்கங்களை எழுப்பியபடியும் சென்றனர். பேரணியின் ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் பிரகாஷ் மணிமாறன் செயல்பட்டார். பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.