உத்தமபாளையத்தில் புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம்

உத்தமபாளையத்தில் புகையில்லா போகி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-01-13 17:47 GMT

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜாராம் ஆகியோரது அறிவுரையின்பேரில் உத்தமபாளையம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் விகாசா மெட்ரிக் பள்ளி இணைந்து புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் முகமது அப்துல்காசிம் தொடங்கி வைத்தார். இதில், பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி பாண்டியன், விகாசா மெட்ரிக் பள்ளி தாளாளர் இந்திரா உதயகுமார், நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, பள்ளி முதல்வர் குமரேசன், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், பசுமைப்படை மாணவர்கள், சாரண-சாரணிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊர்வலமாக சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம், பஸ் நிலையம், புறவழிச்சாலை, கிராமச்சாவடி, தேரடி வீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாக சென்று விகாசா பள்ளியில் முடிவடைந்தது.  

Tags:    

மேலும் செய்திகள்