செங்கோட்டை:
செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து புகையில்லா போகி விழிப்புணா்வு கூட்டம் மற்றும் பேரணி நடந்தது. முகாமிற்கு நகராட்சி சுகாதார அலுவலா் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளா் பழனிசாமி முன்னிலை வகித்தார். சுகாதரா மேற்பார்வையாளா் முத்துமாணிக்கம் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து சுகாதார ஆய்வாளா் பழனிசாமி மாணவர்களிடையே புகையில்லா போகி என்ற தலைப்பில் விழிப்புணா்வு உரையாற்றினார்.
பள்ளி மாணவர்கள் விழிப்புணா்வு பதாகைள் ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து பள்ளி வளாகத்தை அடைந்தனா்.